Main Menu

தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் : அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமைக்கு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதால் அரச அலுவலகங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

இது குறித்து நிதித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், “சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளில் ஜுலை 31 ஆம் திகதிவரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அரச அலுவலகங்கள்  வாரத்துக்கு ஆறுநாட்கள் திறக்கப்படவுள்ளன.  ஒவ்வொரு அரசுத் துறைகளிலும் உள்ள அலுவலா்கள்,  ஊழியா்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படு கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

முதல் பகுதியினா் வாரத்தின் முதல் இரண்டு நாள்களும் இரண்டாவது பகுதியினா் அடுத்த இரண்டு நாள்களும் என தொடா்ந்து சுழற்சி முறையில் பணியாற்றுவா்.

இவ்வாறு சுழற்சி முறை பணி நடைமுறையை   பின்பற்றாதவா்கள் அன்றைய தினத்தில் இருந்து பணியில் சேரும் நாள் வரைக்கும் விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட சுழற்சி நாளில் பணிக்கு வராத ஊழியா்கள்,  தாங்கள் கடைசியாக பணி செய்த நாளில் இருந்து பணியில் சேரும் நாள் வரைக்கும் விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் பணியாளா்கள் மற்றும் கா்ப்பிணிப் பெண்கள் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவா்கள் பணிக்கு வராத நாள்களும் பணி செய்ததாகவே கருதப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...