Main Menu

தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி உரிமைகளை பெற வேண்டும்- ராம்

தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி தங்களது உரிமைகளைப் பெற வேண்டுமென இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என்.ராம் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிறுபான்மையினர், சஜித்திற்கு வாக்களித்திருந்த போதிலும் ஏனையோர் கோட்டாபயவுக்கே வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ளனர்.

மேலும் தமிழ்த் தலைவர்கள் ஏற்கனவே ராஜபக்ஷ தரப்புடன் பேச்சுவார்ததை நடத்தி வருகின்றனர்.  ஆனால், புதிய ஜனாதிபதி அதிகாரப் பகிர்வை ஒப்புக்கொள்வாரா என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது.

அத்துடன் அதிகாரப்பகிர்வு போதுமானதாக இல்லை என்பது தமிழர்களுடைய குற்றச்சாட்டு. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதிகாரப் பகிர்வு கிடைப்பது கடினம் என்றுதான் தோன்றுகிறது.

ஆனாலும் தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். வன்முறையற்ற வழியில் போராடி தங்களது  உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

இதேவேளை இலங்கை முழுவதுமாக சீனா பக்கம் நிற்கிறது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்றம். அது உண்மையல்ல. கோட்டாபய இந்தியாவோடு நெருக்கமாகதான் இருக்கின்றார்.

எனவே , இலங்கை – இந்திய உறவில்  மாற்றம் ஏற்படாது. ஒரு வழக்கமான உறவே நீடிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...