Main Menu

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6ஆம் கட்டமாக கடந்த முதலாம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

6ஆம் கட்ட ஊரடங்கில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த 4 வாரங்களைப் போன்று, தமிழகம் முழுவதும் இன்றும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் மட்டுமே இன்று திறக்கப்பட்டுள்ளன.

துணிக்கடைகள், சந்தைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய அனைத்து நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

முக்கிய வீதிகள் மற்றும் இணைப்பு வீதிகளில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளதோடு, அத்தியாவசிய காரணங்கள் தவிர்த்து, உரிய அடையாள அட்டை இல்லாமலும் பயணிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பகிரவும்...