Main Menu

அஸாமில் தொடரும் கடும் மழை – உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80ஆக உயர்வு

அஸாமில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.

அஸாமில் கடந்த இருவாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நதிகளிலும் வெள்ளநீர் அபாய கட்டத்தைத் தாண்டி ஓடுகிறது.

குறிப்பாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக ஜோர்கத், தேஸ்பூர், கோல்பரா மற்றும் துபாரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் குறைந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளான மக்கள் தொகை 36 இலட்சத்திலிருந்து 28 இலட்சமாக குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும் இன்னும் 2,678 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், 290 நிவாரண முகாம்களில் 47 ஆயிரத்து 465 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் பேரிடர் மேலாண்மைப் படையினர் கூறியுள்ளனர்.

பகிரவும்...