தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பம்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு
அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வுகள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் மாலை ஐந்து மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய் சிறப்பு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த, தவெக அரசால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் கடந்த மே 29ம் திகதி ஆரம்பித்து வைக்கவிருந்தார். எனினும், பல்வேறு காரணங்களால் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், அதற்கான நிகழ்வு ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
