Main Menu

தமிழகம், புதுவை இறுதி தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது

நடைபெற்று முடிந்த மக்களவைத் தெர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கட்சி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில் முன்னிலை அடிப்படையில் முக்கிய கூட்டணி மற்றும் கட்சிகளின் தேர்தல் முடிவுகள் கணிப்பிடப்பட்டுவிட்டன.

எனினும் தேர்தலின் இறுதி முடிவு வெளியாகாத நிலையில் தற்போது, தமிழகம் மற்றும் புதுவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

அத்துடன், அ.தி.மு.க. கூட்டணி 1 தொகுதியில் (தேனீ மக்களவைத் தொகுதி) மாத்திரமே வெற்றி பெற்றது என்பதுடன், ஒரு தொகுதியில் தேர்தல் இடம்பெறவில்லை.

அதேபோல், தமிழகத்தின் சட்டமன்ற இடைத்தேர்தலில், தி.மு.க. முன்னிலையில் இருந்த 13 தொகுதிகளில் 4 தொகுதிகளின் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அ.தி.மு.க. முன்னிலையில் இருந்த 9 தொகுதிகளில் 3 தொகுதிகளின் முடிவுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தமிழகத்தில் இரண்டு பிரதான கட்சிகளையும் தவிர்த்து தனித்து போட்டியிட்ட அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்கு வீதத்தைப் பெற்றுள்ள நிலையிலும், எந்தவொரு தொகுதியையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...