Main Menu

தமிழகத்தில் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று

இந்தியாவில் கறுப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் 847 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆம்போடெரிசின் – பி என்ற மருந்து தற்போதுவரை 2 ஆயிரத்துத்து 470 குப்பிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் கூடுதலாக 30 ஆயிரம் மருந்து குப்பிகளை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்கள் கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது வெள்ளை பூஞ்சை தொற்று மற்றும் தோல் பூஞ்சை தொற்று என்பனவும் ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...