Main Menu

தமிழகத்தில் பாடசாலைகள் மீள திறப்பு!

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சுழற்சி முறையில் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பல மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் பாடசாலைக்கு வருவதால் முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம், கலந்துரையாடல் உள்ளிட்ட செயற்பாடுகளை நடத்த வேண்டும் என அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதேநேரம் மாணவர்கள் முகக் கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை பின்பற்றவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பாடசாலை கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சென்று வழிகாட்டு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா  என்பதை கண்டறிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

பகிரவும்...