Main Menu

தமிழகத்தில் நச்சுத்தன்மை உள்ள பால் விநியோகம் : மக்களவையில் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை உள்ளதாக மக்களவையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் 37.7 சதவீதமான பால் பொது மக்கள் உபயோகப்படுத்துவதற்கு தகுந்ததாக இல்லையா என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கேள்வியெழுப்பியிருந்தார்.  குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்படி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே தெரிவிக்கையில், தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை உள்ளதாகவும் நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தமிழகத்தில் மொத்தம் 551 பால் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவற்றுள் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...