Main Menu

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது – சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் கொரோனா ஆரம்பத்தில் இருந்ததை விட படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு குறைந்துவிட்டது.

ஆனாலும் 500-க்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு இன்னும் படிப்படியாக குறையாமல் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

சென்னையில் ஒரு சிலர் முககவசம் அணிகின்றனர். ஆனால் தென் மாவட்டங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் முகக்கவசம் அணிவதை விட்டுவிட்டனர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கூட முகக்கவசம் அணியாமல் செல்வது தற்போது அதிகரித்து வருகிறது.

கொரோனா இனி நமக்கு வராது என்ற நினைப்பில் பலர் கவனக்குறைவாக உள்ளனர். அது தவறு. தற்போது தேர்தல் காலமாக உள்ளதால் பல நிகழ்ச்சிகள், கூட்டம், கூட்டமாக நடத்தப்படுகிறது. யாருமே முககவசம் அணிவது இல்லை. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முககவசம் அணிய வேண்டும். மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உருமாறிய கொரோனா தமிழகத்தில் உள்ளதா,இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் இதை தடுப்பதற்காக கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே வழிமுறைகள் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கண்டிப்பாக முகக்கவசத்தை மீண்டும் அனைவரும் அணிய வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...