Main Menu

தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மோடி

17 ஆவது இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் நேற்று இடம்பெற்றன.
நேற்றைய முதற்கட்ட வாக்குப்பதிவுகள் 18 மாநிலங்கள் அடங்கலாக 91 தொகுதிகளில் இடம்பெற்றன.
இந்த தேர்தலுக்காக அதிகளவான வாக்கு பதிவுகள் மேற்குவங்கத்திலும் குறைந்தளவான வாக்குபதிவுகள் பிகாரிலும் பதிவாகியுள்ளன.
543 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில் 900 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய தேர்தல்களில் ஒன்றான இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக இடம்பெறுகின்றன.
இதையடுத்து எதிர்வரும் 23ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைத்;துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற இந்த கூட்டணியில், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில பிராந்திய கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.
இதேநேரம், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைத்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற இந்தக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, இராச்டிரிய ஜனதா தளம், ஜனதா தளம் உள்ளிட்ட சில பிராந்தியக் கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இந்திய நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஒரே கட்டமாக எதிர்வரும் 18 ஆம் திகதி வாக்குப் பதிவு இடம்பெறவுள்ளது. 
பாரதிய ஜனதா கட்சி மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்கான பிரசாரங்களை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மீண்டும் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்றையதினம் கேரளாவில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள உள்ள மோடி, அதனை நிறைவுசெய்து இன்றிரவு மதுரைக்கு பயணமாகி, நாளை தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

பகிரவும்...