Main Menu

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு!

வியட்நாமும், ஐரோப்பிய ஒன்றியமும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

வியட்நாமுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெறும் வர்த்தக பறிமாற்றங்களின் போது அறவிடப்படும் 99 சதவீதம் வரையிலான வரிகளைக் காலப்போக்கில் அகற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் முனைகின்றது.

முதற்கட்டமாக, வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை 65 சதவீதம் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கான ஏற்றுமதிகளை, 2020 ஆம் ஆண்டிற்குள் 20 சதவீதம் அதிகரிக்கவும், 2030-ஆம் ஆண்டிற்குள் 40 சதவீதம் அதிகரிக்கவும் வியட்நாம் முனைப்பு காட்டி வருகின்றது.

வியட்நாமின் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்த்ததைக் காட்டிலும் வலுவான வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில், புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

பகிரவும்...