Main Menu

டோவர் அருகே 39 ஈரானிய குடியேறிகள் கைது

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 39 ஈரானிய குடியேறிகள் அடங்கிய நான்கு படகுகள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் டோவர் துறைமுகத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது படகிலிருந்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் 9 பேர் மீட்கப்பட்டனர்.

காலை 6 மணியளவில் மீட்கப்பட்ட இரண்டாவது படகிலிருந்து 5 பேரும் 7 மணி முதல் காலை 7.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய இரு படகுகளிலிருந்தும் முறையே 11 மற்றும் 14 பேரும் மீட்கப்பட்டனர்.

தடுத்து நிறுத்தப்பட்ட 39 பேரும் தாம் ஈரானிய பிரஜைகள் என்று தெரிவித்தாக அரசாங்க செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடியேற்ற அதிகாரிகளால் நேர்காணல் செய்யப்படுவதற்கு முன்னர் இவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு சிறிய படகில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பது நம்பமுடியாதவகையில் ஆபத்தானது எனவும் இத்தகைய பயணத்தை முயற்சிக்கும் எவரும் தங்கள் உயிர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களின் உயிர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள் என உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...