Main Menu

உலக ஏழைகள் தினத்தில் வசிப்பிடமற்ற 1,500 பேருக்கு போப் உணவளித்துள்ளார்

ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் அதன் உலக ஏழைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இருப்பிடம் அற்ற 1,500 பேருக்கு போப் ஃபிரான்சிஸ் இலவச மதிய உணவளித்துள்ளார்.

வத்திக்கானில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் பழங்கள், காய்கறிகள், இனிப்புப் பண்டங்கள் என அறுசுவை விருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டது.

இருப்பிடம் இல்லாதவர்களுக்கு நாளாந்தம் உதவிகளை வழங்கி வரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வசதி குறைந்தவர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்க கடந்த வாரம் முழுவதும் செயின்ட் பீற்றர்ஸ் சதுக்கத்தில் நடமாடும் மருந்தகம் ஒன்றும் செயற்படுத்தப்பட்டது.

அதேவேளை, எதிர்வரும் வருடம் முழுவதும் வசதி குறைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கும் போப் ஃபிரான்சிஸ் ஏற்பாடு செய்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற பிரார்த்தனையின் போது வசதி குறைந்தவர்களை கண்டு வெறுப்புக் காட்டாமல், அவர்களுக்கு உதவும் மனப்பாங்கை மக்கள் கொண்டிருக்க வேண்டும் எனவும் போப்  ஃபிரான்சிஸ் கோரிக்கை விடுத்தார்.

பகிரவும்...