Main Menu

ஜோ பிடனின் நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட தயார்: சீனா அறிவிப்பு!

அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பிடன் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.

ஜோ பிடன் பதவியேற்ற பிறகு இருநாடுகளுக்கிடையிலான உறவு வலுப்பெறுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, இதனை உறுதிப்படுத்தினார்.

இருநாடுகளுக்கான பொது நலன்களை மறந்துவிட்டுச் சீனாவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்ததால் உறவு மோசமடைந்ததாகக் குறிப்பிட்டார்.

கொரோனா, பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், இனச் சமத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக ஜோ பிடன் கூறியதை வாங் இ சுட்டிக்காட்டினார்.

சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையில் வர்த்தக போர், கொரோனா விவகாரம் என பல விடயங்களில் மோதல் ஏற்பட்டது.

தேர்தலுக்கு முன்னதாக சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க தான் விரும்புகிறேன் என ஜோ பிடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...