Main Menu

ஜேர்மனி: கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது

மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று மாநிலங்களான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா, பவேரியா மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன.

முந்தைய நாளோடு ஒப்பிடும்போது ஜேர்மனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100இற்க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் முயற்சிக்கையில் எல்லைகளை மூடும் சமீபத்திய நாடாக ஜேர்மனி மாறிவிட்டது.

வர்த்தக போக்குவரத்து தவிர, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் சுவிஸ்லாந்துடனான அதன் எல்லைகள் நேற்று (திங்கள்கிழமை) மூடப்பட்டன.

இதேவேளை அண்மைய நாடான போலந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் மைக்கேல் வோஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், டொமினிகன் குடியரசு தனது முதல் கொரோனா வைரஸ் மரணத்தை பதிவு செய்துள்ளது. இது சமீபத்தில் ஸ்பெயினிலிருந்து திரும்பிய 47 வயதான பெண்மணி என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...