Main Menu

ஜெயலலிதாவின் வீட்டில் காணப்படும் பொருட்கள் குறித்த விபரங்கள் வெளியீடு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் 4 கிலோ 372 கிராம் தங்கம் மற்றும் 601 கிலோ வெள்ளி பொருட்கள் காணப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்தார். குறித்த வீட்டை நினைவில்லமாக்கும் முற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்  வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விபரத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி  வீட்டில் 4 கிலோ  372 கிராம் எடையுள்ள  14 வகையான தங்க ஆபரணங்கள், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள  867 வெள்ளி பொருட்கள், 162 வகையான சிறிய வெள்ளி பாத்திரங்கள் உள்ளன.

மேலும் 11 தொலைக்காட்சிகள்,  38 ‘ஏசி’க்கள்,  சமையல் அறை தவிர்த்து பிற அறைகளில்  556 மரப் பொருட்கள், 6 ஆயிரத்து 514 சமையல் பாத்திரங்கள்,  12 சமையல் அலுமாரிகள்,  1 ஆயிரத்து 055 அலங்காரப் பொருட்கள், 15 பூஜை பாத்திரங்கள்,  10 ஆயிரத்து, 438 துணி வகைகள் என மொத்தமாக  32 ஆயிரத்து  721 பொருட்கள் உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...