Main Menu

ஜெயலலிதாவின் மரண விசாரணை – ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஏற்கனவே விதிக்கப்பட்ட குறித்த தடையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிவரை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அப்பலோ வைத்தியசாலை மருத்துவர்களை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையகம் அனுப்பிய அழைப்பாணைக்கு எதிரான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.

ஜெயலலிதாவின் மரண விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பலோ மருத்துவமனை அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனுவினை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து அப்பலோ நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...