Main Menu

ஜி-7 நாடுகளின் உதவித் திட்டத்தை நிராகரிப்பதாக பிரேசில் அறிவிப்பு

அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த ஜி-7 நாடுகளின் உதவித் திட்டத்தை நிராகரிப்பதாக பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது அவமதிப்பான கருத்துக்களை திரும்பப் பெறாவிட்டால் தாம் அந்த நிதியுதவியை நிராகரிப்போம் என ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த நிதி உதவியை ஏற்க மறுத்த பிரேசில் ஜனாதிபதி, அமேசன் விவகாரத்தில் ஆர்வம் கொண்டிருப்பது போன்று ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார்.

அத்தோடு இந்த விவகாரம் அது மக்ரோனின் காலனி அல்ல என்றும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு மரியாதை கொடுத்து அவர் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் தொடர்ந்தும் பிரேசிலில் காட்டுத்தீ பரவி வருகின்ற நிலையில் இரு நட்டு தலைவர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளமை முகச்சுளிப்பை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...