Main Menu

ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கின்றார் ஜப்பானிய பிரதமர்

ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஏப்ரல் 9 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க வாய்ப்புள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சந்திப்பு இடம்பெற்றால் வெள்ளை மாளிகையில் புதிய ஜனாதிபதியை சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமை அவர் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலின் உறுதிப்பாட்டை வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏப்ரல் முதல் வாரமளவில் சுகா இந்த விஜயத்தை மேற்கொள்வார் என்று தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கடோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, அவரை முதன்முறையாக சந்தித்திருந்தமை குறிப்பிடத்த்க்கது.

பகிரவும்...