Main Menu

ஜனாதிபதியுடன் முரண்பாடு? பதவியை இராஜிநாமா செய்தார் பிரேஸில் சுகாதாரத்துறை அமைச்சர்!

பிரேஸில் கடுமையான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

பிரேஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக்கின் இந்த திடீர் தீர்மானம், அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவல் கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்க்கும் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, அண்மையில் உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் முடி திருத்துமிடங்களை திறந்த நிலையில் இருக்கக்கூடிய அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தார்.

இதனை சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தநிலையில் ஜனாதிபதிக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் தனது பதவியை இராஜிநாமா செய்திருக்க கூடுமென உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். எனினும் ராஜிநாமா செய்ததற்கான காரணத்தை நெல்சன் டைக் தெரிவிக்கவில்லை.

நெல்சன் டைக்கு முன்னாள் இருந்த அமைச்சர், ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவில் நீக்கப்பட்டு ஒருமாதத்திற்கு முன்னர் தான் நெல்சன் டைக் அமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...