Main Menu

ஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவின் மூன்றில் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிபுணர்களினால் இந்தோனேசிய அரசாங்கத்திற்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜகார்த்தாவில் சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் அந்த நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கும் என இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைவடைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம், அதிகரித்து வரும் கடல் மட்டம், மாறி வரும் பருவநிலை ஆகிய காரணங்களால் ஏற்கனவே குறித்த நகரின் பல பகுதிகள் கடலுக்குள் முழ்கியுள்ளன.

இந்தநிலையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்தோனேஷியா புதிய தலைநகரைத் தேட வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...