Main Menu

சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் ஆரம்பித்து வைப்பு!

சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகங்களில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் ஜேர்மனியின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்படவுள்ளன.

இந்நிலையில், சென்னையில் இன்று(திங்கட்கிழமை) மின்சார பேருந்தின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

குறித்த சோதனை ஓட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்தனர்.

இந்த பேருந்துகளில் குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கெமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

பேருந்தில் உள்ள மின்கலத்தினை 4 மணி சார்ஜ் செய்தால் 320 கி.மீ. தூரம் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...