Main Menu

சூடானில் வெள்ளப்பெருக்கு – மூன்று மாதகால அவசர நிலை பிரகடனம்!

சூடானில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு மூன்று மாதகால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று சூடானில் ஏற்பட்டுள்ள கடும் வௌ்ளம் காரணமாக பழைமை வாய்ந்த பிரமிட்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சூடானில் நைல்நதி கரையோரம் சுமார் 2,300 ஆண்டுகள் பழைமையான பிரமிட் காணப்படுகின்றது.

அப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக நைல் நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் நதிக் கரையோரம் அமைந்துள்ள பிரமிட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகின்றது.

இதனிடையே, வௌ்ளம் காரணமாக நாடளாவிய ரீதியில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

பகிரவும்...