Main Menu

சீனாவுக்கான ரஷ்ய தூதரை சந்தித்து சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி பேச்சுவார்த்தை

சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், சீனாவுக்கான ரஷ்யாவின் தூதரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆணையர் செங் குயோபிங், ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரே டெனிசோவை சந்தித்து இருதரப்பு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான தனது படையெடுப்பில் இராணுவ உதவியை கோரும் ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்க கூடுமென்ற அச்சத்திற்கு மத்தியில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

ரஷ்யாவிற்கு நேரடியாக இராணுவ உபகரணங்களுடன் உதவி செய்தால், சீனா மீது தடைகளை விதிக்க தயங்கமாட்டோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...