Main Menu

சீனாவின் முயற்சியை முறியடிக்கும் வகையில் 4 நாடுகளின் பேச்சை முறைப்படுத்த இந்தியா திட்டம்

சீனாவை முறியடிக்கும் வகையில், ஜப்பானில் தொடங்க உள்ள 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையான பேச்சை முறைப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடையான பேச்சு செவ்வாயன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது.

இந்தியப் பெருங்கடல் – பசிபிக் மண்டலத்தில் கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள், உட்கட்டமைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மண்டல ஒத்துழைப்பு ஆகியன பற்றிப் பேச்சு நடத்தப்பட உள்ளது.

5ஜி மற்றும் 5ஜி பிளஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இணைந்து செயல்படுவது குறித்தும் இதில் பேசப்பட உள்ளது.

இந்த 4 நாடுகள் குழுவைப் பிளவுபடுத்த முயன்ற சீனா, இருதரப்பு பொருளாதார உறவுகளைப் புதுப்பிக்கலாம் என ஜப்பானிடம் தெரிவித்தது.

முதலில் 3 நாடுகளுடன் பேச்சு நடத்திய பின்னர் அந்தப் பேச்சுக்களை நடத்தலாம் என ஜப்பான் பிரதமர் யோசிகிடே சுகா, சீன அதிபர் சி ஜின்பிங்கிடம் கூறிவிட்டார். 

பகிரவும்...