Main Menu

சீனாவின் புதிய பிரதமராக லீ கியாங் தேர்வு

சீனாவின் தற்போதைய பிரதமர் லீ கெகியாங்கின் பதவி காலம் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய பிரமராக லீ கியாங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த பதவி சீனாவின் 2-வது அதிகாரமிக்க பதவியாகும். இவர் சீனாவில் 3-வது முறையாக அதிபராக பதவி ஏற்றுள்ள ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவர். அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் திகழ்ந்தார். லீ கியாங், ஜியாங் மாகாணத்தின் தலைமை ஊழியர்கள் அதிகாரியாக இருந்தவர். 2013-ம் ஆண்டு கவர்னராகவும் இருந்தார். இவரது காலத்தில் ஜியாங் மாகாணம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது. செல்வ செழிப்பான மாகாணமாக மாறியது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் அதனை கட்டுப்படுத்த இவர் மிகச்சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...