Main Menu

சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்

சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனினும், குறித்த தடுப்பூசியால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்து இன்னும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் மூலோபாய ஆலோசனைக் குழுவின் சுயாதீன வல்லுநர்கள், சீனா, பிரேசில், இந்தோனேசியா, துருக்கி மற்றும் சிலி ஆகிய நாடுகளில் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலிருந்து சினோவக்கின் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, சில கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான பக்கவிளைவுகளின் ஆபத்து உள்ளமை தொடர்பாக சீன அரசுக்குச் சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் நிறுவனமும் தகவலை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, சினோவக் தடுப்பூசி 32 நாடுகளால் உள்ளநாட்டு அதிகார வரம்புகளின்கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் 260 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதைாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...