Main Menu

சில இலங்கை தலைவர்கள் தேசத்தின் இறைமையை அடகு வைக்கின்றனர்- கனடாவில் அனுரகுமார

இலங்கை வலுவான வெளிவிவகாரகொள்கையை பின்பற்றவேண்டியதன் அவசியத்தை ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வலியுறுத்தியுள்ளார்

கனடாவின் வான்கூவரில் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர்இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்;டு உறவுகள் பயனுள்ள வெளிநாட்டு ஈடுபாட்டிற்கு தேவையான வலுவான தன்மையைகொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நலன்களால் கவரப்பட்ட சில இலங்கை தலைவர்கள்  தேசத்தின் இறைமையை அடகுவைக்கின்றனர் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் நீண்டகால நலன்களிற்கு பதில் நிதிசார்ந்த நன்மைகளை அடிப்படையாக வைத்து தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெளிவிவகார கொள்கை நாட்டின் நலனிற்கு முக்கியத்துவம் வழங்குவதாக காணப்படவேண்டும் எனதெரிவித்துள்ள அனுரகுமார நாடு உலகஅதிகார போட்டியின் இடைநடுவில் சிக்குண்டுள்ளது வெளிநாட்டு சக்திகளின் அதிகார மோதல்களமாக இலங்கை மாறுவதை தடுப்பதற்கான வெளிவிவகார கொள்கை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...