Main Menu

சிறுவர்களோடு இணைந்து வாழ்வோரின் கொரோனா தொற்று வீதம்? – ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு

சிறுவர்களோடு இணைந்து இருப்பது கொரோனா வைரஸ் தொடர்பான கூடுதல் பாதிப்புகளுக்கான அபாயத்தை ஏற்படுத்த மாட்டாது என ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

LSHTM எனப்படும் லண்டனைத் தளமாக கொண்டு இயங்கும் கல்வி நிறுவனம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைப் பருவ வயதினருடன் இணைந்து வாழ்வதன் காரணமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் அல்லது அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வுகளுக்காக முதிர்ச்சியடைந்த ஒன்பது மில்லியன் நபர்கள் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டு குழந்தைகளுடன் இணைந்து வாழும் மற்றும் குழந்தைகளிடம் இருந்து தனித்து வாழும் நபர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்த்தாக்க அபாயம் ஒப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் 18 வயத்துக்கு உட்பட்டுள்ள வயதினருடன் இணைந்து வாழ்வோருக்கான நோய் ஆபத்து மிகவும் குறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...