Main Menu

எதிர்த் தாக்குதலுக்கு தயாராயாகுங்கள்: எத்தியோப்பியப் பிரதமர் அறிவிப்பு

திகாரி மாநிலத்தவர்களின் அத்துமீறல்களை அடக்கும் வகையிலான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு எத்தியோப்பிய பிரதமர் தமது ராணுவத்தினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

எத்தியோப்பியாவில் ராணுவத் தளம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாக எத்தியோப்பியப் பிரதமர் அபி அஹமட் இக்கட்டளையினை விடுத்துள்ளார்.

மேலும் குறித்த தாக்குதல் தொடர்பாக திகாரி மாநிலத்தின் ஆளும் கட்சியான ‘திகாரி மக்கள் விடுதலை முன்னணி’ யினரை அபி அஹமட் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக எத்தியோப்பிய தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அபி, திகாரி மாநிலத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பல உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தாக்குதல் குறித்து எத்தியோப்பிய பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், குறித்த நிலைமையானது கட்டுப்படுத்த முடியாத நிலையினை எட்டியுள்ளதாகவும், வழக்கமான சட்ட நடவடிக்கைகள் மூலம் குறித்த சூழலை கட்டுப்படுத்துதல் கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எத்தியோப்பியாவில் அடுத்த ஆறு மாத காலத்துக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...