Main Menu

சாம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் அணி தகுதி பெற்றுள்ளது!

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையே பல்வேறு மைதானங்களில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் (Tottenham) அணி தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதி போட்டியின் 2 வது லெக் ஆட்டத்தில் அஜாக்ஸ் அணியை ரொட்டன்ஹேம் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் அஜாக்ஸ் அணி வீரர்கள் 2 கோல்கள் அடித்து அசத்தினார்கள்.

இரண்டாவது பாதியில் ரொட்டன்ஹேம் வீரர் லூகாஸ் மோரா அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அணிக்கு பலம் சேர்ந்தார். போட்டியில் வெற்றி பெற மேலும் ஒரு கோல் தேவைப்பட்ட நிலையில், லூகாஸ் மோரா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்தநிலையில், அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் லிவர்பூல் மற்றும் ரொட்டன்ஹேம் அணிகள் களமிறங்குகின்றன.

இந்தநிலையில், தாய்லாந்தில் எதிர்வரும் ஜூன் 5-ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கிங்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் கரீபிய நாடான கியுராகாவுடன் இந்திய கால்பந்து அணி பலப்பரீட்சை நடத்துகின்றது. கடந்த 1977-ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் கிங்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்கின்றது.

இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதம் எப்.ஐ.எச் உலக ஹொக்கி தொடர் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள புவனேசுவரம் கலிங்கா மைதானம், அண்மையில் வீசிய புயல் காரணமாக சிறிதளவு சேதமடைந்துள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என ஹொக்கி
இந்தியா தெரிவித்துள்ளது.

பகிரவும்...