Main Menu

மெட்ரிட் ஓபன் டென்னிஸ்: முக்கிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேற்றம்!

மெட்ரிட் ஓபன் டென்னிஸில் ஜப்பான் வீராங்கனையான நயோமி ஒசாகா, நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்ட்டன்ஸ் (Kiki Bertens), ரோமானியாவின் சிமோனா ஹாலெப் (Simona Halep) ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

மெட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது. நேற்று (புதன்கிழமை) பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

ஒரு போட்டிகளில் 7ஆம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் 12ஆம் நிலை வீராங்கனையான செவஸ்டோவாவை எதிர்கொண்டார். இதில் கிகி பெர்ட்டர்ன்ஸ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் விக்டோரியா குஸ்மோவாவை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-0, 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். முதல் நிலை வீராங்கனையான நயோமி ஒசாகா 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் சான்ஸ்னோவிச்சை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பகிரவும்...