Main Menu

சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை ; சுமந்திரன்

சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே எனது நிலைப்பாடு.அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு செயற்பாடு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் முழுமையானதொரு சர்வதேசப் பொறிமுறையைக் கோருகின்றார்கள். நாங்கள் ஒரு கலப்பு முறைக்கு இணங்கியிருந்தோம். 

அந்தவகையில் தற்போதும் கலப்புமுறை தான் சிறந்ததாக எனக்குத் தோன்றுகிறது. காரணம் முழுமையானதொரு சர்வதேசப் பொறிமுறை எனின், அது இலங்கையில் வேண்டுவது மிகவும் கடினமாகும். 

அந்தத் தீர்ப்புக்களை எமது நாட்டில் செயற்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். ஆகையினாலேயே இலங்கையின் சட்டவரையறைக்குள் கலப்பு நீதிமன்றம் எனது தெரிவாக இருக்கின்றது.

ஆனால் இதைக்கூட அரசாங்கம் செய்யாவிடின், நாங்கள் சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றம் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கும்.

 அதாவது சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றம் அல்லது ஏதாவதொரு முழுமையான சர்வதேசப் பொறிமுறையை நாடவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றே கூறியிருந்தேன்.என்றார். 

பகிரவும்...