Main Menu

சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது – பிரியங்கா காந்தி

சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் தோல்வியை காட்டுவதாகவும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஒக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ மத்திய அரசின் சொந்த ஆய்வும் இரண்டாவது அலை உடனடியாக பரவும் என்று சுட்டிக்காட்டியது. ஆனாலும் மத்திய அரசு அதனை புறக்கணித்தது.

தற்போது இந்தியாவில் 2 ஆயிரம் லொறிகள் மூலமாக மட்டுமே ஒக்சிஜனைக் கொண்டு செல்ல முடியும். தேவைப்படும் இடங்களுக்கு ஒக்சிஜன் சென்றடையவில்லை. கடந்த 6 மாதங்களில் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் இன்று நாம் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம்.

மோசமான திட்டமிடல் காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை, திட்டமிடல் இல்லாததால் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, சரியான வியூகம் இல்லாததால் ஒக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. இது அரசாங்கத்திற்கு தோல்வி ஆகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...