Main Menu

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் சற்று முன் காலமானார்.

கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழக அரசியல்வாதிகளைத் தனது பொதுநல வழக்குகள் மூலம் அதிர வைத்தவர் டிராபிக் ராமசாமி.

87 வயதான இவரது உடல்நிலை, கடந்த சில மாதங்களாகவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டிராபிக் ராமசாமி காலமானார்

அவரது உடல் நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மாலை 7.45 மணிக்குக் காலமானார். இந்தத் தகவலை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அவரது இறுதி சடங்குகள் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பேனர் கலாசாரம்

பேனர் கலாசாரம்

தமிழகத்தையே ஆட்டுவித்துக் கொண்டிருந்த பேனர் கலாசாரத்திற்கு முடிவு கட்டியவர் டிராபிக் ராமசாமி. இவர் தொடர்ந்த பொதுநல வழக்கில்தான் கட்-அவுட் மற்றும் பேனர்களுக்கு பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது. ஆளும் கட்சியினர் வைக்கும் பேனர்களை போலீசார் அகற்றத் தயங்கியபோதும், ஒற்றை ஆளாகப் பேனர்களை அகற்றியவர் டிராபிக் ராமசாமி.

சென்னை கட்டடங்கள்

அதேபோல சென்னையில் பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் பல அதிரடியா உத்தரவுகளைச் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்தது. தலைநகரில் பார்க்கிங் பிரச்சினை ஓரளவு சரியாக இவரும் முக்கிய காரணம். இதுதவிர அவர் தொடர்ந்த பொதுநல வழக்குகள் சமூகத்தில் தேவையான மாற்றங்களுக்கு வழி வகுத்தது.

'டிராபிக்' ராமசாமி

‘டிராபிக்’ ராமசாமி

தொடக்க காலத்தில் சென்னை பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்தவர். இதன் காரணமாக இவர் டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்படுகிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து, எஸ் ஏ சந்திரசேகர் நடிப்பில் உருவான திரைப்படம் கடந்த 2018இல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...