Day: May 4, 2021
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,14,826 ஆகமேலும் படிக்க...
கொரோனா தொற்று பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்- ஸ்டாலின் அறிக்கை
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று முதலமைச்சராக பதவி ஏற்கஉள்ள முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 20மேலும் படிக்க...
யாழ். நகரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு- முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை இடத்பெற்றது. யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார், யாழ். மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்தியமேலும் படிக்க...
தமிழகத்தின் புதிய ஆட்சிக்கு சபையில் வாழ்த்துத் தெரிவித்தது கூட்டமைப்பு!
தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால இருப்புத் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தி.மு.க. கூட்டணி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், எதிர்வரும் ஏழாம் திகதி தமிழக முதல்வராகமேலும் படிக்க...
திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மநீம தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க.மேலும் படிக்க...
மெக்சிகோவில் மெட்ரோ ரெயில் பாலம் உடைந்து சாலையில் விழுந்த ரெயில் – 23 பேர் பரிதாப பலி
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து உலகின் மிகப்பெரிய மற்றும் விரைவான போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்து 60 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மெக்சிகோ சிட்டியின் தெற்குப் பகுதியில்மேலும் படிக்க...
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.41 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32.26 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்மேலும் படிக்க...
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்.மேலும் படிக்க...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி
மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையம்மேலும் படிக்க...
மனத் தூய்மையுடன் எதிர்க்கட்சியாகப் பணியாற்றுவோம்- பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டறிவிப்பு
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அ.தி.மு.க.வின் கொள்கை வழிநின்று பணியாற்றுவோம் என அறிவித்துள்ளனர். அத்துடன், தமிழகமேலும் படிக்க...
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்தது!
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்துள்ளது. இதன்படி, முதல் தொகுதியில் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பூசிகளை பொறுப்பேற்பதற்காக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன,மேலும் படிக்க...
நாட்டில் அதிகபட்ச ஒரேநாள் கொரோனா பாதிப்பு இன்று பதிவானது!
நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 923 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா பாதிப்பாகப் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 10 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுமேலும் படிக்க...
சர்வதேச ஊடக சுதந்திர தினம்: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி!
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வு, யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மௌன அஞ்சலியுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவிமேலும் படிக்க...