Main Menu

சந்திராயன் 2 : நிலவில் இறங்கிய விக்ரமின் தொடர்பு துண்டிப்பு

சந்திராயன்-2 விண்கலத்திலிருந்து நிலவில் இன்று அதிகாலை தரையிறக்கப்பட்ட விக்ரம் கலத்துடனான தொடர்பு துண்டிப்பு  சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் 2 விண்கலமானது கடந்து ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில்  புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. 

கடந்த ஆகஸ்ட்  14 ஆம் திகதி  ‘சந்திரயான்-2’புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது.

அத்தோடு செப்டெம்பர்  2 ஆம் திகதி சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் கலமானது தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.

இந்நிலையில் சந்திரயான் 2 விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று அதிகாலையில் நடந்தது.

 சந்திரயான் 2 விண்கலத்தின் ‘விக்ரம் கலம்’ நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...