Main Menu

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருகிறோம் – டிடிவி தினகரன்

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருவதாக அ.ம.மு.க பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஸ்லீப்பர் செல் என்பவர்கள் எங்கள் நலன் விரும்பிகள் ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்புபவர்கள்.

அவர்கள் வரும் நேரத்தில் வருவார்கள். நாங்கள் நிச்சயம் அ.தி.மு.க என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம். தமிழ்நாட்டு மக்கள் அதற்கான வாய்ப்பை எங்களுக்கு தருவார்கள்.

அ.ம.மு.க வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. சசிகலா உறவினர்களின் சொத்துக்கள் அரசு உடைமையாக்கப்படுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவைகள் சுதாகரன் சொத்தோ, இளவரசி சொத்தோ கிடையாது அது கம்பெனி சொத்து. நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கிறது.

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளை செய்து கொண்டுள்ளோம். அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார். சசிகலா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்

பகிரவும்...