Main Menu

கொவிட்-19 தொற்று பரவலை தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகள்: ஜேர்மனி அரசாங்கம்!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகளை மேம்படுத்த ஜேர்மனி அரசாங்கம் 500 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளது.

பொது அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் காற்று சுழற்சியை மேம்படுத்த இந்த மானியங்கள் செலவிடப்படவுள்ளன. தனியார் நிறுவனங்கள் இன்னும் தகுதி பெறவில்லை.

வைரஸ்கள் ‘ஏரோசோல்கள்’ எனப்படும் சிறிய துளிகளில் பரவுகின்றன. அவை பாதிக்கப்பட்டவர்களால் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக தும்மும்போது அல்லது இருமும்போது பரவுகின்றன.

குறைந்தது எட்டு நிமிடங்களாவது வைரஸ்கள் ஒரு அறையின் காற்றில் இருக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளிர்ந்த வானிலை காரணமாக, அதிகமானோர் வீட்டிற்குள் இருப்பதால் அதிக ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

புதியவற்றை நிறுவுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள காற்றோட்ட அமைப்புகளை மேம்படுத்துவதே முக்கிய நோக்கம்.

ஒவ்வொரு மேம்படுத்தலும் அதிகபட்சமாக, 100,000 யூரோக்கள் செலவிடப்படலாம். செவ்வாய்க்கிழமை முதல் மானியம் ஒதுக்கப்படும்.

பகிரவும்...