Main Menu

கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்கும் டென்மார்க்!

கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்களா என்பதைக் காண்பிக்கும் டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்க டென்மார்க் அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது.

இதுகுறித்து நிதியமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் கூறுகையில், ‘மூன்று, நான்கு மாதங்களில், டிஜிட்டல் கொரோனா கடவுச்சீட்டு பயன்படுத்த தயாராக இருக்கும்.

டேனிஷ் சமுதாயத்தை மீள மறுதொடக்கம் செய்வது முக்கியமானது. இதனால் நிறுவனங்கள் மீண்டும் இயங்க முடியும். பல டேனிஷ் நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களாக இருக்கின்றன, அவை உலகம் முழுவதையும் ஒரு சந்தையாகக் கொண்டுள்ளன.

முதல் கட்டமாக, பெப்ரவரி இறுதிக்குள், டென்மார்க்கில் உள்ள குடிமக்கள் தடுப்பூசி போடப்பட்டார்களா என்பதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்பாட்டை ஒரு டேனிஷ் சுகாதார இணையதளத்தில் பார்க்க முடியும்.

இது உங்கள் மொபைல் தொலைபேசியில் நீங்கள் வைத்திருக்கக்கூடிய கூடுதல் கடவுச்சீட்டாக இருக்கும், அது உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக ஆவணப்படுத்துகிறது’ என கூறினார்.

பகிரவும்...