Day: February 5, 2021
கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்கும் டென்மார்க்!
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்களா என்பதைக் காண்பிக்கும் டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்க டென்மார்க் அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதுகுறித்து நிதியமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் கூறுகையில், ‘மூன்று, நான்கு மாதங்களில், டிஜிட்டல் கொரோனா கடவுச்சீட்டு பயன்படுத்த தயாராக இருக்கும்.மேலும் படிக்க...
ஆப்கானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையை சேர்ந்த 16பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் கான் அபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படை முகாம் மீது நேற்றிரவு (வியாழக்கிழமை) திடீரென நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்தனர். இந்தமேலும் படிக்க...
ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தல்!
மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், மியன்மாரில் நிலவும் சூழ்நிலை கவலை அளிப்பதாகவும் ஐநா பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. எனினும், அடுத்த ஒருமேலும் படிக்க...
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில், முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்தமேலும் படிக்க...
மக்கள் மத்தியில் நான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை – மு.க.ஸ்டாலின்
மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். கலைமாமணிமேலும் படிக்க...
சம்பள உயர்வு விவகாரம்: அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினால் ஸ்தம்பிதமானது மலையகம்
தங்களுக்கான நாட் சம்பளம் ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் மலையகத்திலுள்ள பிரதானமேலும் படிக்க...
பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல- சுமந்திரன்
சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பேரணியேயன்றி, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகமேலும் படிக்க...
பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி முல்லைத்தீவு நகரை அண்மித்தது!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி முல்லைத்திவு நகர்நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், முல்லைத்தீவில் சிவில் சமூகத்தினர், மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அதிகமானோர் பேரணியுடன் இணைந்துகொண்டுள்ளனர். தற்போது வட மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பேரணியுடன் இணைந்துள்ளார்.மேலும் படிக்க...