Main Menu

கொள்கலனில் உயிரிழந்த 39 பேரில் ஒருவர் வியட்நாமியப் பெண் என அஞ்சப் படுகிறது

கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலனில் உயிரிழந்த 39 பேரில் ஒருவர் வியட்நாமியப் பெண் என அஞ்சப்படுகிறது

ட்ரா மை என்று அழைக்கப்பட்ட 26 வயதான அந்தப் பெண் உயிரிழந்தவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று ஹனோயைச் சார்ந்த மனித உரிமைகள் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பதற்கு முன்னர் அவர் கொள்கலனில் இருந்து தொடர்ச்சியாக இறுதி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர்.

அவரது குறுஞ்செய்திகளின்படி “மன்னிக்கவும் அம்மா, அப்பா. வெளிநாட்டிற்கான எனது பாதை வெற்றிபெறவில்லை. அம்மா நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்! நான் இறந்து போகிறேன்.. என்னால் மூச்சுவிட முடியவில்லை… நான் Nghen இலிருந்து புறப்பட்டேன்..  என்னை மன்னிக்கவும் அம்மா, அப்பா” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளின் நேரங்கள் செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பப்பட்டதைக் குறிக்கின்றன என்று கூறப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் 31 ஆண்கள் மற்றும் எட்டு பெண்கள் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ட்ரா மை யின் குடும்பத்தினர் தமது மகளின் உடலை அடையாளம் உதவி தேவை என்று தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...