Main Menu

ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்: பிரதமர் ஜோன்சன்

பிரெக்ஸிற் தாமதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தான் தீர்மானிக்க வேண்டும் ஆனால் ஒக்ரோபர் 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது இன்னும் சாத்தியம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது ஐரோப்பிய ஒன்றியம் சொல்வதைப் பொறுத்தது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் டிசம்பர் 12 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான தனது முயற்சியை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி எதிர்த்தால், அவரது அரசாங்கம் பாராளுமன்றத்தில் அர்த்தமற்ற பிரெக்ஸிற் செயல்முறையில் ஈடுபடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரெக்ஸிற் காலநீடிப்பினை ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் புதிய காலஎல்லைத் திகதி குறித்து முடிவெடுக்கவில்லை.

பகிரவும்...