Main Menu

கொரோனா வைரஸ் : ஸ்பெயினில் அவசர காலநிலை பிறப்பிக்கப் பட்டது

கொரோனா வைரஸ் தொற்றினால் ஸ்பெயினில் உயிரிழப்புக்கள் 120 ஐ எட்டியுள்ள நிலையில் நாளை சனிக்கிழமை முதல் அங்கு அவசரகாலநிலை அமலுக்கு வரும் என்று ஸ்பெயின் பிரதமர் பேதரோ சான்செஸ் (Pedro Sánchez) தெரிவித்துள்ளார்.

நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான அனைத்தையும் அரசாங்கம் செய்யும் என்று பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 50% ஆல் அதிகரித்து 120 ஐ எட்டியது. கொரோனா வைரஸ் தொற்றினால் 4,200 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை அடுத்த வாரம் 10,000 க்கு மேல் அதிகரிக்கும் என்று பிரதமர் பேதரோ சான்செஸ் கூறியுள்ளார்.

நாடுமுழுவதும் அவசரகால நிலையை 15 நாட்கள் வரை முன்னெடுக்க தமது அரசாங்கம் அனுமதியளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நடமாட்டம் அல்லது வாகனங்களில் பயணிப்பது கட்டுப்படுத்தப்படுவதுடன் தொழில் மற்றும் விவசாயத் துறைகளில் அதிகாரிகளின் தலையீடுகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா இப்போது தொற்றுநோயின் மையமாக உள்ளது என்று உலக நெருக்கடி குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்ரர் ரெட்ரோஸ் அடனோம் கெப்ரியசுஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நன்றி bbc.co.uk

பகிரவும்...