Main Menu

கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் ஹற்றன் நகர் பகுதியில் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை திருச்சபை கொழும்பு மறை மாவட்டத்தின் ஏற்பாட்டில் தோட்ட சமூக அபிவிருத்தி பணியகத்தின் ஊடாக இன்று (திங்கட்கிழமை) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தோட்ட சமூக அபிவிருத்தி பணியகத்தின் மாவட்ட இணைப்பாளர் என்.நித்தியா, முகாமையாளர் என்.லோகராணி, மஸ்கெலியா பிரதேச சபையின் சுகாதார நிர்வாகி எஸ்.ஆனந்தன் உட்பட உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் இணைந்து குறித்த விழிர்ப்புணர்வு துண்டுப்பிரசுரத்தை மக்களுக்கு வழங்கி வைத்ததோடு,விழிப்புணர்வு பதாதைகளை காட்சிப்படுத்தினர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பான வழிமுறைகள் அடங்கிய குறித்த துண்டுப்பிரசுரம், ஹற்றன் நகர் பகுதி, அரச தனியார் பேருந்து தரிப்பிடம், டிக்கோயா, பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வூட் ஆகிய பிரதான நகரங்கள் போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...