Main Menu

கொரோனா வைரஸ்; அனைத்து செயற்பாடு களையும் நிறுத்த தயாராகும் நியூசிலாந்து

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் அனைத்து அத்தியாவசிய சேவைகள், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படவுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.

இந்த முடிவு நியூசிலாந்தில் உள்ள பிரஜைகளுக்கு மிக முக்கியமான கட்டுப்பாட்டைக் விதிக்கும் என்றும் ஆனால் உயிர்களைக் காப்பாற்றவும் வைரஸ் பரவலை தடுக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், “நாங்கள் அனைவரும் இப்போது ஒரு தேசமாக சுயமாக தனிமைப்படுத்த தயாராகி வருகிறோம். இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் பல்லாயிரக்கணக்கான நியூஸிலாந்தினர் இறக்க நேரிடும்” எனக் கூறினார்.

நியூசிலாந்தில் மேலும் 36 பேர் தொற்றுக்கு இலக்கையமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதுவரை நாடளாவிய ரீதியில் 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் அங்கு எவ்வித உயிரிபப்புக்களும் பதிவாகவில்லை என அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...