Main Menu

கொரோனா வைரஸ் அச்சம்: தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பிரதமரின் அலுவலக சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரும் தற்போது 14 நாட்களுக்கு தனித்திருக்க உள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனையில் பிரதமருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இருந்தபோதிலும், பாதுகாப்பு கருதி அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.

அத்துடன், அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற உறுப்பினர்களும் அவரவர் வீடுகளில் 14 நாட்களுக்கு தனித்திருக்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் நடத்தப்படும் அனைத்துக் கூட்டங்களும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது.

முறையான சோதனை மேற்கொள்ளப்பட்ட உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்று மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதை எதிர்த்து, நாடு தழுவிய ரீதியில் நடைமுறையில் உள்ள எளிதாக்கப்பட்ட முடக்கநிலை, எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் வரை நீடிக்கின்றது.

பகிரவும்...