Main Menu

டென்மார்க் மக்கள்தொகையில் 1.8 சதவீதத்தினருக்கு கொவிட்-19 தொற்று: ஆய்வில் தகவல்!

வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் மக்கள்தொகையில் 1.8 சதவீதம் வரையிலானவர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

டென்மார்க் அரசு ஆய்வு அமைப்பான எஸ்.எஸ்.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 58 லட்ச மக்கள்தொகையில் 0.5 முதல் 1.8 சதவீதம் வரையிலானவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

5 நகரங்களில் 2,600 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.

இந்த நோய் டென்மார்க்கில் அனைவருக்கும் பரவுமா என்பது குறித்து துல்லியமாகத் தெரிந்துகொள்ள குறைந்தது 6,000 பேருக்காவது கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 11,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 561பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...