Main Menu

கொரோனா வைரஸ் அச்சத்தால் இத்தாலி அரசாங்கம் மேற் கொண்ட நடவடிக்கை!

இத்தாலியின் லோம்பர்டு பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்றும் இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐரோப்பாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடு இத்தாலி என்பதுடன் நேற்றுமட்டும் வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது.

எனவே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாட்டின் முயற்சிகளில் ஒன்றாக குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஸ்கை ரிசார்ட்டுகளை மூடப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 230 ஐ கடந்துவிட்டது, மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை புதிதாக நேற்று மட்டும் 1,200 பேர் தாக்கத்துக்கு உள்ளாக்கியமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,883 ஆக உயர்ந்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பகிரவும்...